1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (10:44 IST)

10, 12ஆம் வகுப்புகளுக்கு துணை தேர்வுகள் தேதி அறிவிப்பு!

exam
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணை தேர்தல் துறை தேர்வுகள் தொடங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் துணை தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் 12ம் வகுப்புகளுக்கு முதல் துணைத் தேர்வுகள் ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
 
 பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் துணை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது