1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (12:56 IST)

12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: ரிசல்ட் எப்போது?

exam
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் இன்றுடன் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத் துறை ஆயத்தம் செய்து வருகிறது, அடுத்ததாக பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களும் விரைவில் திருத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது