1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 16 ஜூன் 2022 (13:32 IST)

10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை: தேர்வு பயம் என தகவல்

dead
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் வரும் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருப்பதை அடுத்து சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சி பட்டி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் பிரபாகரன் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் 
 
அவர் தனது தேர்வு முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக இருந்ததாகவும் நாளை தேர்வு முடிவு என்ற தகவல் வெளியானதும் அவரது அச்சம் அதிகமானதாக கூறப்படுகிறது
 
இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.