இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர்!
கோவையைச் சேர்ந்த மாரப்பன் என்ற 105 வயது முதியவர் 1952 முதல் அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையத்தில் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த மாரப்பன் தாத்தாவுக்கு தற்போது அவரது வயது 105. நேற்று அவர் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இவர் 1952 ஆம் ஆண்டு தொடங்கி நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்கு செலுத்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.