ஆரம்பிக்கலாங்க… கமலுடன் இணைந்து விக்ரம் பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (13:03 IST)

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்தலுக்குப் பின்னர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசனை அவரது ஹெலிகாப்டரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ் ‘ஆரம்பிக்கலாங்களா #விக்ரம்’ என குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :