பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
siva| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (11:12 IST)
பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது என்பதும் வரும் 9-ஆம் தேதி முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் முதல் போட்டிக்கான ஏற்பாடுகளை ஐபிஎல் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென முதல் போட்டியில் பங்கு கொள்ள இருக்கும் பெங்களூர் அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி முக்கிய வீரரான டேனியல் சாம்ஸ் என்ற வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்ப்டுத்தி கொண்டதாக பெங்களூர் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் முதல் போட்டி தொடங்கும் முன்னரே பெங்களூரு அணியின் முக்கிய வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :