சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்ய....!

Written By Sasikala
Updated: புதன், 18 டிசம்பர் 2019 (18:02 IST)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் -1  டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
செய்முறை:
 
முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த  வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கல்ந்து அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு  பின்பு அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.

வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு  தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.
 
குறிப்பு: சீரக சம்பா அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments