வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (14:43 IST)

சுவையான சிக்கன் கட்லெட் செய்ய !!

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
வெங்காயத் தாள் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
ஜீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சிக்கன் மின்ஸ் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - 3 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு  - 3 மேஜைக்கரண்டி
மைதா மாவு - 3 மேஜைக்கரண்டி
பிரட் தூள் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்பு அதில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்பு அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும். பின்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும். பின்பு உப்பு சேர்க்கவும். சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் கொத்தமல்லித் தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

பின்பு வேகவைத்த உருளைக் கிழங்கை எடுத்து நன்கு மசித்து அதனுடன் வதக்கிய மசாலாவை சேர்க்கவும். அவற்றை கையால் நன்கு பிசையவும். பின்பு அதனுடன் பிரட் தூள்களை சேர்த்து நன்கு பிசையவும்

பின்பு அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டி தட்டையாக்கி, பின்பு மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது நீா் சேர்த்து நன்கு கலக்கவும். பிரட் தூளை எடுத்து கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுக்கவும். பின்பு அதனை பிரட் தூளில் பிரட்டி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பின்பு கட்லெட்டை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் தயார்.