Daily Horoscope
✕

நாக்கில் எச்சில் ஊறும் நண்டு மசாலா எப்படி செய்வது...?

Updated: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (16:24 IST)
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 15 பல்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி - சிறிது
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 
செய்முறை:
 
முதலில் நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக்கி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
 
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும்,  சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும். 
 
இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே கிளறி விடவும். நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். சுவையான நண்டு தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments