Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவாட்டு ரசம் செய்ய...!

Updated: வியாழன், 26 ஜூலை 2018 (16:55 IST)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கீற்று
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
செய்முறை:
 
கருவாட்டை சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளி சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். 
 
கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். மீதமுள்ள ஒரு தக்காளி, வெக்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி போடவும். பிறகு   மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமகவே சேர்க்க வேண்டும்.  
 
பிறகு சுத்தம் செய்த கருவாட்டு துண்டுகளை பாதி பாதியாக நறுக்கி போடலாம் அல்லது சிறிது எண்ணெய் விட்டு சற்று வதக்கியும் அதில் சேர்த்து நன்கு  கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான சூப்பரான   கருவாட்டு ரசம் தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments