சில்லி சிக்கன் கிரேவி

Sasikala| Last Modified திங்கள், 7 நவம்பர் 2016 (14:56 IST)
தேவையானப் பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ (எலும்பு நீக்கியது)
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
கார்ன் பிலௌர் மாவு - 2 தேக்கரண்டி
குடைமிளகாய் - 3 நறுக்கப்பட்ட
வினிகர் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் - தேவையான அளவு

 
செய்முறை:
 
சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து சுமார் 15 நிமிடம் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊற விடவும். பின் கார்ன் பிலௌர் மாவு போட்டு கலந்து கடாயில் எண்ணெய் விட்டு வேகும் வரை சமைக்கவும். 
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி பின் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள், வினிகர், கரம் மசாலா சமைத்து வைத்து சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
 
பிறகு சிறிது கார்ன் பிலௌர் மாவுடன் தண்ணீர் கலந்து அவற்றில் ஊற்றி ஒரு கொதி விட்டு ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் தூவி இறக்கவும். சுவையான சில்லி சிக்கன் கிரேவி தயார்.


இதில் மேலும் படிக்கவும் :