1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சாலை விபத்தில் அமைச்சர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை பலி

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை
‌திரு‌ச்‌சியை அடு‌த்த பாடாலூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்.

சட்ட‌ப்பேரவை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வ‌ந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவர் வ‌ந்த காரைப் பின்தொடர்ந்து வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி வந்துகொண்டிருந்தார். அவரது காரும் விபத்துக்கு உள்ளானது. இ‌தில‌் அ‌தி‌‌ர்‌ஷ்டசவமாக அவ‌ர் உ‌யி‌‌ர் த‌ப்‌பினா‌ர்.

அமை‌ச்ச‌ர் ம‌‌ரிய‌ம் ‌பி‌ச்சை உட‌ல் ‌திரு‌ச்‌சி அரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.