1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

வறட்சியில் சத்தியமங்கலம் வனப்பகுதி: உணவு, நீரின்றி வனவிலங்குகள் பாதிப்பு

ஈரோடு செ‌ய்‌‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

சத்தியமங்கலம் வனவிலங்குகள் ஈரோடு
சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதி முற்றிலும் வறண்டு காய்ந்து போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனவிலங்கு களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.

இதன் காரணமாக இந்த வனப்பகுதியில் கடம்பூர் மற்றும் தலமலை பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் வனவிலங்குகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது.

இந்த வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் உணவுகளை உண்டு வனத்தில் உள்ள குட்டை, குளங்களில் உள்ள தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்து வருகிறது. சத்தியமங்கலம் வனக்கோட்ட பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக பருவமழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது.

மேலும் செடி,கொடிகள் வறண்டு காய்ந்து தீ பிடிக்கும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குட்டை, குளங்களும் காய்ந்து வறண்டு போனது. இதனால் இந்த வனத்தையே நம்பி உயிர்வாழும் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் இரவு நேரங்களில் சில இடங்களில் வனப்பகுதி தீ பிடித்து எரியும் நிலையும் ஏற்படுகிறது. இதை தடுக்க சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் மேற்பார்வையில் ரேஞ்சர்கள் மணி, மோகன், ராஜ்மோகன், சிவமல்லு மற்றும் ஏழுமலை மற்றும் வனவர்கள் உள்ளிட்ட வனப்படையினர் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர்.
About Writer
Webdunia