அமரேசன், பாண்டியன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
இலங்கை தமிழர் பிரச்சனையில் தீக்குளித்து உயிரிழந்த அமரேசன், இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் பேரணியில் கலந்து கொண்ட போது மாரடைப்பால் இறந்த பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக்குழு உறுப்பினர் பாண்டியன், இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் உணர்ச்சிமிகு முழக்கங்களை உரக்க ஒலித்துச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மாண்டார் என்னும் செய்தி படித்தும்,
கட்சி சார்பற்ற அமரேசன் போன்ற தமிழர்கள் தீக்குளித்து மாண்ட செய்தி கேட்டும் பெரும் துயரம் கொண்டு என் ஆழ்ந்த இரங்கலை அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.