சென்னை: 'விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் சத்திய மூர்த்தி பவனை இடிக்க சொல்லியிருக்க மாட்டார். அவர் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்‘ என்றுதான் பேசினேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு குரலை காங்கிரஸ் கொடுக்கவில்லை என்பதே என் ஆதங்கம். எனவே, காங்கிரஸ் கட்சியினர் என்மீது வருத்தம் கொள்ளத் தேவையில்லை என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.