1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thaimaman Scheme: Tamil Nadu Government Allocates Rs 755 Crore to Provide 1-Gram Gold Rings for Newborns From September 15

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: 'தாய்மாமன் திட்டத்திற்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு...

தமிழக அரசு
தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில், தமிழக வெற்றி கழக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் அவர்கள், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் அறிவித்திருந்த "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" நடப்பு ஆண்டிலேயே முறைப்படி செயல்பாட்டுக்கு வருகிறது.
 
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உன்னதமான திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா "ஒரு கிராம் தங்க மோதிரம்" தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும். ஏழை, எளிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாய்மாமனின் பாசத்தோடு இந்த மோதிரம் அணிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்திற்காக, முதற்கட்டமாக ரூ. 755 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்விலும், குழந்தைகளின் எதிர்காலத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்க்கும் இந்தத் திட்டம், தவெக அரசின் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுகவுக்குப் பேரிடி: கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கை தீவிரப்படுத்தும் தவெக அரசு!