1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சோனியாவை எதிர்த்து முழக்க‌மி‌ட்ட ம.தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை: வைகோ

சோனியாகாந்தி மதிமுக வைகோ
சோ‌னியாகா‌ந்‌தியை எ‌தி‌ர்து முழ‌க்க‌மி‌ட்ட ம.‌தி.மு.க. மு‌ன்னா‌ள் மாணவ‌ர் அ‌ணி செயலாள‌ராக இரு‌ந்த ‌சிவ‌ங்க‌ர் ‌மீது ஒழு‌ங்கு நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.தி.மு.க. முன்னாள் மாணவர் அணிசெயலாளரான வழக்கறிஞர் சிவசங்கர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு பழைய கோணிப்பையில் பழைய காகித கற்றைகளை வைத்து எரிக்க முயன்றதாகவும், சோனியாகாந்தியை எதிர்த்து முழக்கமிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய செயல்களை ம.தி.மு.க. கடுகளவும் அனுமதிக்காது என்பதோடு நடைபெற்ற செயலுக்காக சிவசங்கருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia