1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பவானிசாகரில் காதல் ஜோடி தற்கொலை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

பவானிசாகர் காதல்ஜோடி தற்கொலை ஈரோடு சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவருக்கும், இவரது வீட்டிற்கு அருகே வசித்த சரஸ்வதிக்கும் (23) காதல் இருந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வரும் இவர்களின் காதலுக்கு சரஸ்வதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி பவானிசாகர் பூங்காவிற்கு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு, பூங்கா அருகே இருவரும் விஷம் குடித்தனர். அவர்களின் பிணங்கள் கிடப்பதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Webdunia