1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

எல்லைப் பகுதியில் வாகன சோதனை

வனப்பகுதி பாதுகாப்பு வாகன சோதனை மும்பை தாக்குதல்
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ந்து தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான ஆசனூர், புளிஞ்சூர், கேர்மாளம், பாலாறு உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

வனப்பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தமிழ்நாடு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது தென்பட்டால், உடனே காவல்துறைக்கோ அல்லது அதிரடிப்படைக்கோ தகவல் கூறவேண்டும் என எல்லைப்பகுதி கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia