சென்னை : அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசா, சட்டமன்றத்தில் ஒரு சாதி சாயம் பூசிக் கொள்வதும், மற்ற இடங்களில் வேறு வேறு சாயங்கள் பூசிக் கொள்வதும், வேஷங்களை மாற்றிக் கொள்வதும் ஜெயலலிதாவிற்கு பழக்கப்பட்டு போனவை என்று கூறியுள்ளார்.