1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

புது‌க்கோ‌ட்டை‌ : கட‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌‌க்க‌ச் செ‌ன்ற 4 ‌மீனவ‌ர்க‌ள் மாய‌ம்!

புதுக்கோட்டை கோட்டைபட்டினம் சிறிலங்க கடற்படை
கடலு‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌க்க‌ச் செ‌ன்ற புது‌‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் கோ‌ட்டை‌ப‌‌ட்டின‌த்தை‌ச் சே‌‌ர்‌ந்த 4 ‌மீனவ‌ர்களை காண‌வி‌ல்லை. அவ‌ர்களை ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

கோ‌ட்டை‌ப்ப‌ட்டின‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ம‌ணி, ச‌ங்க‌ர், செ‌ல்வரா‌ஜ், மது ஆ‌‌கிய 4 ‌மீனவ‌ர்க‌ள் கட‌ந்த ‌சில ‌தின‌ங்களு‌க்கு மு‌ன் கடலு‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ன்ற‌ன‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்ட‌ப்படி கரை‌க்கு‌த் ‌திரு‌ம்பாததா‌ல் பல‌‌த்த ச‌ந்தேக‌ங்க‌ள் எழு‌ந்து‌ள்ளன‌.

காணாம‌ல் போன ‌மீனவ‌ர்களை‌த் தேடி, வேறு 2 படகுக‌ளி‌‌ல் கடலு‌க்கு‌ச் செ‌ன்றவ‌ர்களு‌ம் காணாம‌ல் போனவ‌ர்களை க‌‌ண்டு‌பிடி‌க்க முடியாம‌ல் கரை ‌திரு‌ம்‌பியு‌ள்ளன‌ர்.

இத‌‌ற்‌கிடையே, காணாம‌ல் போன ‌‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகு கடு‌ம் புய‌லி‌ல் ‌சி‌க்‌கி இரு‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்று‌ தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌. எ‌னினு‌ம், 4 ‌மீனவ‌ர்களையு‌ம் ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர்தா‌ன் ப‌ிடி‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள் அ‌ச்ச‌ம் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.