1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பெருந்துறை அருகே ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை!

- ஈரோடு வேலு‌ச்சா‌மி

ஈரோடு ஆசிரியர் பணம் நகை கோபிசெட்டிபாளையம்
ஈரோடு மாவ‌ட்ட‌ம் பெரு‌ந்துறை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌சி‌ரிய‌ர் ‌வீ‌ட்டி‌‌ன் பூ‌ட்டை உடை‌த்து ம‌ர்‌ம கு‌ம்ப‌ல் பண‌ம், நகைகளை அ‌ள்‌ளி‌ச் செ‌ன்றன‌ர். இ‌ம்மாவ‌ட்ட‌த்‌தி‌ல் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளதால் அப்பகு‌தி மக்கள் ‌அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் கடந்த வாரம் ஒரு டாக்டர் வீட்டில் புகு‌ந்த மர்ம நப‌ர்க‌ள் 150 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பிற்கு சுற்றுலா சென்ற ஜவுளி கடை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களின் பரபரப்பு அடங்கும் முன்பே நேற்று பெருந்துறை தென்றல் நகர் பகுதியை சேர்ந்த அருணாசலம் (50) எ‌ன்ப‌ர் ‌வீ‌ட்டி‌ல் கொ‌ள்ளையடி‌க்க‌ப்‌ப‌ட்டது. இவர் காங்கேயம் பேரூராட்சியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஆசிரியை.

இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணிக்கு சென்ற நேரத்தில் இவர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்கநகை, ரொக்கம் ரூ.60 ஆயிர‌த்தையு‌ம் திருடி சென்றுவிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்ப‌வ‌ங்களா‌ல் அ‌ப்பகு‌தி மக்கள் பெரு‌ம் அச்சமடைந்துள்ளனர்.
About Writer
Webdunia