சென்னை : சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த வன்முறையை கண்டித்தும், மாணவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் வரும் 22ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அந்த அமைப்பின் மாநிலச் செயலர் திருமலை அறிவித்துள்ளார்.