1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌ங்கை ‌‌பிர‌ச்சனை:மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த்!

கோவை இலங்கை தமிழர் விஜயகாந்த்
இல‌ங்கை‌ த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்‌வுகாண ம‌த்‌திய அரசு உறு‌தியான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியு‌ள்ளா‌ர்.

கோவை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டியள‌ி‌த்த அவ‌ர், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது அவர்களுடைய உரிமை அவர்கள் அறிவிக்கிறார்கள் ஆனா‌ல் இந்திய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று கூ‌‌றினா‌ர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அனைவரு‌க்கு‌ம் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌க்கு நிரந்தர தீர்வுகாண, போரை நிறுத்த வேண்டும் எ‌ன்று‌ கூ‌றிய அவ‌ர் இத‌ற்கு அரசியல் தீர்வுதான் முடிவாகும் எ‌ன்று‌ம் இந்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சிங்களர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை வழ‌ங்க‌ப்பட வேண்டு‌ம் எ‌ன்ற கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், அவர்கள் வீடு அவர்களுக்கு வேண்டும், நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கவேண்டும் எ‌ன்று‌ம் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கொடுக்க வேண்டும் எ‌ன்று‌மகூ‌றினா‌ர்.
About Writer
Webdunia