சென்னை : மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டுகளை புதிய மின்பொருள் உதவியுடன் தமிழில் வழங்கிட ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வீழ்ந்து போன போக்குவரத்துக்கழகம் தற்போது நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.