தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர் பி.டபுள்யூ.சி.டேவிதார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் தலைவராகவும் டேவிதார் நியமிக்கப்படுகிறார். வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர் மற்றும் சுகாதாரம், குடும்பநலத் துறையின் அலுவல் சாரா சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக...