1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜெ. பசும்பொன் புறப்படுவதில் தாமதம்!

ஜெயலலிதா பசும்பொன் பயணம் தாமதம் தேவர் நினைவிடம் அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜெயலலிதாவின் பயணத்திற்காக மும்பையில் இருந்து தனி விமானம் கொண்டுவரப்பட்டிருந்தது. 11 மணியளவில், வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த ஜெயலலிதா, விமானத்தில் ஏற முற்பட்ட போது கால் தடுக்கியது. இதையடுத்து, சிறிது நேரம் ஓய்வறையில் இருந்த ஜெயலலிதா மீண்டும் போயஸ்தோட்டத்தில் உள்ள் வீட்டிற்குச் சென்றார்.

மீண்டும் பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ஜெயலலிதா, மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் செல்லும் ஜெயலலிதா, அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
About Writer
Webdunia