பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாகர்கோயிலில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.இலங்கையில் தமிழர்களை அந்நாட்டு இராணுவத்தினர் கொல்வதைக் கண்டித்து மதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறி வைகோவையும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்...