சென்னை : இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காணவேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி சென்னையில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.