1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

வருமான உச்சவரம்பு உயர்வு: மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி!

வருமான உச்சவரம்பு உயர்வு கருணாநிதி மன்மோகன் சிங்
உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு உ‌ரிய இட ஒது‌க்‌கீ‌ட்டை பெற அவ‌ர்களது ஆ‌ண்டு வருமான உ‌‌ச்ச வர‌ம்பை உய‌ர்‌‌த்‌தியத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு, முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி ந‌ன்‌றி கடித‌ம் அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று எழுதியுள்ள கடிதத்தில், 17.9.2008 அன்று உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உரிய இட ஒதுக்கீட்டை பெற அவர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தி‌லிருந்து ரூ.4 1/2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

தற்போது மத்திய அமை‌ச்சரவை கூடி வருமான உச்சவரம்பை ரூ.2 1/2 லட்சத்தில் இருந்து ரூ.4 1/2 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் மேலும் பலர் இட ஒதுக்கீடு பெற்று உறுதியாக பயன் அடைவார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப மத்திய அரசு எடுத்துள்ள தற்போதைய முடிவு தற்காலிக தீர்வை தரும். தமிழக மக்கள் சார்பில் இதற்காக நான் மத்திய அரசின் முடிவுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia