1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க நடவடிக்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: வரதராஜன் கோரிக்கை!

டீசல் என்.வரதராஜன் மார்க்சிஸ்ட்
தமிழகத்தில் தட்டுப்பாடி‌ன்‌றி டீசல் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டீசல் தட்டுப்பாடு சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தமிழகம் முழுவதும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசோ, எண்ணை நிறுவனங்களோ இந்த தட்டுப்பாடு நீங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசின் விளக்கங்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை.

மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தும் இதுவரை பிரச்சினை தீர அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே மத்திய அரசும் எண்ணை நிறுவனங்களும் தமிழகத்தில் தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க தேவையான அளவு டீசல் உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், மாநில அரசு அதனை உறுதிப்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia