1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

திண்டிவனம்: மின்னல் தாக்கி 5 பேர் பலி!

திண்டிவனம் சாலாவதி மின்னல் புதுவை ஜிப்மர்
திண்டிவனம் அருகேயுள்ள சாலாவதி என்ற கிராமத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியதில் 5 பேர் மாண்டனர். மேலும் 7 பேர் காயமுற்றனர்.

வயற்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த 15 பேர் மழை பெய்யத் தொடங்கியதையடுத்து அருகிலுள்ள வேப்ப மரத்தின் கீழ் சென்று நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் அங்கிருந்த 5 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமுற்றவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia