1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

இல‌ங்கை ‌பிரமுக‌ர் கைது!

இல‌ங்கை கரூ‌ர் சி‌ன்னதாராபுர‌‌ம் ராஜே‌ந்‌திர‌ன்
ச‌ரியான ஆவண‌ங்க‌ள் இ‌ல்லாம‌ல் த‌மிழ‌க‌த்‌தி‌ல் ஏழு வருட‌ங்களாக வ‌சி‌த்து வ‌ந்த இல‌ங்கை ‌பிரமுக‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

கரூ‌ர் மா‌வ‌ட்ட‌ம், ‌சி‌ன்னதாராபுர‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று இரவு ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது ச‌ந்‌தேக‌த்து‌க்கு இடமான முறை‌யி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த ஒருவரை ‌பிடி‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். அவ‌ர் மு‌ன்னு‌க்கு ‌பி‌ன் ‌முரணாக ப‌தி‌ல் அ‌‌ளி‌த்தா‌ர்.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ரிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌வி‌ர ‌விசாரணை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, இல‌ங்கை ம‌ன்னா‌ரை சே‌ர்‌ந்த ராஜே‌ந்‌திர‌ன் (47) எ‌ன்று‌‌ம், இவ‌ர் கட‌ந்த ஏழு வரு‌ட‌ங்களாக ச‌ரியான ஆவண‌ங்க‌ள் இ‌ல்லாம‌ல் ‌வ‌சி‌த்து வ‌ந்தது‌ம் தெ‌‌ரிய வ‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ராஜே‌ந்‌திரனை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.