1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌பிரதம‌ர் இல‌ங்கை செ‌ல்ல‌க் கூடாது: ‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள்!

இலங்கை மன்மோகன் ராணுவ‌ம் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கருணாநிதி
இலங்கை‌யி‌ல் ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌த்து‌கிற சுத‌ந்‌திர ‌தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகு‌றி‌த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "ஈழததமிழர்களை கடந்த கால் நூற்றாண்டுக்கு‌ம் மேலாக ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதுடன், அந்த ராணுவம் நடத்துகிற விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

அவ்வாறு அவர் விழாவில் கலந்து கொண்டால் இத்தனை காலமும் சிங்கள ராணுவம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதான் என்று நியாயப்படுத்துவதாகவும், மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு பொருட்படுத்தாமல் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும்.

எனவே பிரதமர் அந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 31ஆ‌ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் கலந்து கொள்கிறோம். இது தொடர்பாக முத‌ல்வர் கருணாநிதி ம‌த்‌திய அரசை வற்புறுத்தி பிரதமர் இலங்கை செல்வதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." எ‌ன்று கூ‌றியு‌‌ள்ளா‌ர்.