1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெ‌ளிய‌ீடு!

அரசு கல்லூரி விரிவுரையாளர் தேர்வுமு  முடிவு இன்று பிற்பகல் ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசு கலை ம‌ற்று‌ம் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பணி இடங்களுக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 1020 பணி இடங்களுக்கான இந்த தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.

விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தலில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்த்தலில் பெற்ற மதிப்பெண்களுடன் கல்வித்தகுதி, விரிவுரையாளர் பணி முன் அனுபவம், புத்தகம், கட்டுரை வெளியீடு, நேர்காணல் ஆகியவற்றில் அளிக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இனசுழற்சியின்படி தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர்.

தேர்வுபெற்றோர் பட்டியல் சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் பலகையிலும் ஒட்டப்படும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அஞ்சல் மூலம் தனித்தனியே தகவல் அனுப்பப்படும்.

இதைத்தொடர்ந்து, பணி நியமனம் பற்றிய தகவல், கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் தெரிவிக்கப்படும். கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 2007-2008-ம் ஆண்டுக்கான காலி பணி இடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எ‌ன்று ஆ‌சி‌ரிய‌ர் தே‌‌ர்வு வா‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.