தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் தாக்கப்பட்டார்!
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை மர்மக் கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. இதில் அவரைக் காப்பாற்ற வந்தவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதற்காக எம்.எல்.ஏக்கள், அவர்களின் ஆதரவாளர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என கூட்டம் அலைமோதியது.
அப்போது மர்ம கும்பல் ஒன்று அலுவலகத்திற்குள் வந்தது. அக்கும்பலின் கைகளில் அரிவாள்கள், உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
முதலாவது மாடிக்குச் சென்ற மர்மக் கும்பல் அங்கிருந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரையும், அவரின் ஆதரவாளர்களையும் அரிவாளால் வெட்டியது.
இதில் மயூரா ஜெயக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற முயன்ற சத்தியமூர்த்தி பவன் ஊழியர் சீனிவாசன், காங்கிரஸ் பிரமுகர் ராஜமாணிக்கம் ஆகியோர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
அண்மையில், தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியை முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பல் வேல் கம்பால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்நிகழ்வு நடந்துள்ளது.