1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கிருஷ்ணசாமி உடல் நலனை விசாரித்து பிரதமர் கடிதம்!

கிருஷ்ணசாமி உடல் நலனை விசாரித்து பிரதமர் கடிதம்
கத்திக்குத்து காயத்துடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் உடல்நலனை விசாரித்து பிரதமர் மன்மோகன் சிஙகடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூ‌றி‌யிரு‌ப்பதாவது : நேற்றமுன்தினம் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தில், சில உள்ளூர் சமூகவிரோத சக்திகள், தங்கள் வயிற்றில் கத்தியால் குத்தியது குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

கடவுள் அருளால் நீங்கள் உடனடியாக சிறப்பான மருத்துவ சிகிச்சை பெற்று, அபாய கட்டத்தை தாண்டியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்களது மகன் விஷ்ணு பிரசாத்திடம், எனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறேன். நீங்கள் விரைவாக குணம் பெற்று, நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கடித‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் குறிப்பிட்டுள்ளார்.

இ‌ந்த தகவ‌ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Webdunia