தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக 48 லட்சத்து 4 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்காக மாணவ, மாணவிகள் விரைந்து வருகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.அங்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளால் பல மாணவ, மாணவிகள் பதிவு செய்ய முடியாமல் சென்று...