ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக உரிய நட்டஈடு செலுத்தாத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்த நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் விபத்து ஏற்பட்டு நட்டஈடு கொடுக்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் இதே சம்பவத்திற்கு கர்நாடகா அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. நேற்று கோபிசெட்டிபாளையத்தில் மீண்டும் இரு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது. கோபிசெட்டிபாளையம் மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் நடராஜன்...