1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நாஞ்சில் குமரன் சென்னை காவல் ஆணையர்!

நாஞ்சில் குமரன் சென்னை காவல் ஆணையர்
தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராஇருந்நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்!

இதுவரை இப்பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி லத்திகா சரண் இடமாற்றம் செய்யப்பட்டு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக காவலர் நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி கே. ராமானுஜம், தமிழக அரசின் 3வது காவல் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக நிறமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலிற்கு முன்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த நட்ராஜை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அப்பொழுது ஆணையராக நியமனம் செய்யப்பட்ட லத்திகா சரண் ஓராண்டிற்கு மேல் அப்பொறுப்பில் நீடித்த நிலையில் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார்.
About Writer
Webdunia