இளைஞர்களுக்கு உதவித் தொகை : கருணாநிதி நாளை வழங்குகிறார்
தமிழகத்தில் படித்து வேலை இல்லாத இளைஞர்கள் 3 லட்சம் பேருக்கு முதலமைச்சர் கருணாநிதி நாளை உதவித் தொகை வழங்குகிறார்.
படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி, படித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சியில் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 2-வது கட்டமாக கோவையில் 2,50,000 இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்டமாக 3,38,000 இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதேபோல் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் கலந்து கொண்டு வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறார்கள்.