1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

எ‌ன் நாயக‌ன் ‌‌‌‌‌ரி‌ச்ச‌ர்‌ட்‌ஸ்: டெ‌ண்டு‌ல்க‌ர்!

மேற்கிந்திய தீவுகள் ‌வி‌விய‌ன் ரிச்சர்ட்‌‌ஸ் நாயகன் டெ‌ண்டு‌ல்க‌ர்
''மேற்கிந்திய தீவுகள் அ‌ணி‌யி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ‌வி‌விய‌ன் ரிச்சர்ட்‌‌ஸ் தனது நாயகன்'' என்று இ‌ந்‌திய ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கொல்கத்தாவில் புகைப்பட கண்காட்சி ஒன்றில் டெ‌‌ண்டு‌ல்க‌ர் கல‌ந்து கொ‌ண்டா‌ர். அ‌ங்கு அவரும், ரிச்சர்‌ட்சு‌ம் சேர்ந்து செஸ் விளையாடுவது போல இருந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ரிச்சர்‌ட்‌ஸுதான் தன்னுடைய நாயகன் என்று ச‌‌ச்‌சி‌ன் குறிப்பிட்டார்.

ரிச்சர்ட்‌சுட‌ன் தான் அதிக போட்டியில் விளையாடியதில்லை என்றும் கவுன்ட்டி போட்டிகளில் மட்டுமே விளையாடி இருப்பதாகவும் அந்த வாய்ப்பை மிகவும் போற்றுவதாகவும் ச‌ச்‌சி‌ன் கூறியுள்ளார்.

இந்த கண்காட்சியில் டெண்டுல்கர் தனது வீட்டின் முன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. அதனை சுட்டிக்காட்டியுள்ள டெண்டுல்கர் இன்றும் தனது வீட்டின் முன் தெருவில் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புவதாக தெரிவித்தார். தன்னுடைய திருமண புகைப்படத்தை சுட்டிக்காட்டிய டெண்டுல்கர், அதனை தனது வாழ்க்கையின் சிறப்பான தருணம் என்று கூறினார்.