1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

2009 இருபதுக்கு 20 உலகக் கோப்பை பிரிவுகள் அறிவிப்பு

2009 இருபதுக்கு 20 உலகக் கோப்பை பிரிவுகள் அறிவிப்பு
2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான அணிகள் பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன் இந்தியா, பிரிவு ஏ-யில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்த்து விளையாடும்.

நேற்று நடந்து முடிந்த ஐசிசி வாரியக் கூட்டத்தின் முடிவில் இது அறிவிக்கப்பட்டது. இருபதுக்கு 20 கிரிக்கெட் அதிகம் விளையாடப்படாததாலும், அணித் தரவரிசைகள் இதற்கு த‌னியே அளிக்கப்படவில்லை என்பதாலும், முதல் உலக கோப்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் தரவரிசைப்படி பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

பிரிவுகள்:

பிரிவு ஏ: இந்தியா, வங்கதேசம், ஜிம்பாப்வ
பிரிவு பி: பாகிஸ்தான், இங்கிலாந்து, புதிய அணி.1
பிரிவு சி: ஆஸ்ட்ரேலியா, இலங்கை, மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள
பிரிவு டி: நியூசீலாந்து, தென் ஆப்பிரிக்கா, புதிய அணி.2.
About Writer
Webdunia