1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சயீப் அலி கான், கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டார்

கரீனகபூர்
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டௌடி பாலிவுட் முன்னாள் நட்சத்திரம் ஷர்மிளா டாகூர் ஆகியோரின் மகனும் பாலிவுட் நட்சத்திரமுமான சயீஃப் அலி கான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார்.

சயீபிற்கு வயது 42, கரீனாவுக்கு வயது 32. இருவௌம் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

பாந்ராவின் சயீபின் வீட்டில் இந்த் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை தந்தனர்.

கடந்த மார்ச் மாதம் இருவரும் நடித்த ஏஜெண்ட் வினோத் என்ற திரைப்படம் வந்தவுடன் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வெளி உலகிற்கு அறிவித்தனர்.

கரீனாவின் தந்தை ரந்தீர் கபூர் திருமணமான தனது மகள் கரீனா கபூருடன் பால்கனியிலிலிருந்து கீழே காத்திருந்த ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகத்தை தெரிவித்தனர்.