ஆதரவை விலக்கிக் கொண்டார் மமதா!
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தந்து வந்த ஆதரவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் யு.பி.ஏ.யின் பெரும்பான்மை 273-இலிருந்து 254ஆக குறைந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.பி.க்கள் இருந்தனர்.
இதனால் நாட்டின் மைய அரசியலில் திருப்பு முனை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்கள் ஆதவரை விலக்கிக் கொள்கிறோம்.எங்கள் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்கள்" என்றார் மமதா பானர்ஜி.
வெள்ளியன்று திரிணாமூல் அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வு, எல்.பி.ஜி.சிலிண்டர் மீதான உச்சவரம்பு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்ற சர்ச்சைக்குரிய முடிவுகளை வாபஸ் பெற மமதா 72 மணிநேர கெடு விதித்திருந்தார்.
இருப்பினும் இந்த தீவிர முடிவை எடுத்த்தால்ம் வெள்ளிக்கிழமைக்குள் டீசல் விலையை குறைத்தால் முடிவை மறு பரீசீலனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆதரவை விலக்க ஒரு நிமிடம் ஆகாது என்று சவால் விட்ட மமதா 72 மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.
கட்சி முக்கியஸ்தர்களிடம் கலந்தாலோசித்த பிறகு இன்று ஆதரவு வாபஸ் முடிவை அவர் எடுத்துள்ளார்.