தாஸ்முன்ஷி தொடர்ந்து கவலைக்கிடம்!
புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து, கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் கருவிகளுடனேயே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கொல்கட்டா மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுள்ள தாஸ்முன்ஷிக்கு நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.