தொடர்புடைய செய்திகள்
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...
- திமுக அரசு செய்யாததை செய்த தவெக அரசு.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு.. நீதிமன்றத்திலும் தகவல்...!
- கல்வி கட்டணம் என்ன கருப்பு பணமா? தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி..!
- ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..
- பினராயி விஜயன் வீட்டில் சோதனை.. ED அதிகாரிகள் காரை அடித்து நொறுக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்..
மீண்டும் தொடங்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தனது இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் சொத்து முடக்க நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என அறிவித்து, அவற்றை ரத்து செய்யக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சோதனைக்கு எதிரான மனுதாரரின் கோரிக்கைகளை இங்கு விவாதிக்க முடியாது என்றும், இது குறித்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி அங்கு தங்களின் வாதங்களை முன்வைக்குமாறும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவின் மூலம், ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான டாஸ்மாக் ஊழல் வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து எவ்வித முட்டுக்கட்டையும் இன்றி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முழு அனுமதி கிடைத்துள்ளது.
சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான நிதி முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் இந்த தற்போதைய நகர்வு அமலாக்கத்துறைக்கு சாதகமாகவும், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
Edited by Siva
