1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt filed filed fir against kn nehru

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...

kn nehru
2021 முதல் 2026 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு.
 
நகராட்சி நிர்வாகத்தில் சுமார் 1000 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு பலரையும் வேலைக்கு அமர்த்தியதாககவும் நகராட்சி அதிகாரிகள் உட்பட கே.என்.நேரு மீதும் அமலாக்கத்துறை புகார் சொன்னது. அதோடு அதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறையிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்ய சொன்னது.
 
ஆனால் திமுக ஆட்சி நடைபெற்று வந்ததால் தமிழக காவல்துறை கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது.  தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கே.என் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்த தகவலை தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக அவர் நீதிபதியிடம் கூறியிருக்கிறார். தவெக அரசின் இந்த நடவடிக்கை திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் தொடங்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..