1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNTEU Directed to Publish Professor Details on Website Following Arappor Iyakkams RTI Campaign

அண்ணா பல்கலையை அடுத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் போலி பேராசிரியர்களா? திமுக அரசு தூங்கியதா?

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்  கீழ் இயங்கும் சுயநிதித் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களின் முழுமையான விவரங்களையும் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில், 'அறப்போர் இயக்கம்' தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக இந்த முக்கிய உத்தரவு கிடைத்துள்ளது.
 
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றுவதாக காட்டி அரங்கேற்றப்பட்ட போலிப் பேராசிரியர்கள் ஊழல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அதே போன்றதொரு பிரம்மாண்ட போலி பேராசிரியர் முறைகேடு, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகளிலும் நடந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதன் காரணமாகவே, இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வளவு காலமாக தயங்கி வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது தகவல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஆசிரியர் தகுதி மற்றும் கல்வித்தரத்தில் நிலவி வரும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று சமூக ஆர்வலர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலையை தொடர்ந்து தனி இயக்கம் துவங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு எண்ட்ரியா?..