1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஆருஷி வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜாமீன்

ஆருஷி வழக்கு குற்றவாளிள் ஜாமீன் ராஜேஷ் தல்வார் சிபிஐ ராஜ்குமார் கிருஷ்ணா
டெல்லியை அடுத்த நொய்டாவில் ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ராஜ்குமாருக்கும், கிருஷ்ணாவுக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அவர்கள் இருவரும் தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் செல்லலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வரும் 13ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஏதும் சிபிஐ வசம் இல்லை என்பதால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான விஜய் மண்டல், கடந்த வாரத்தில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia